“இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கும் ஏற்படும்” - முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை
இலங்கை அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கையின் சாயல் இந்தியாவிலும் தெரிகிறது. இந்நிலை தொடர்ந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கும் ஏற்படும் அபாயம் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார்.
சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், இலங்கையின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் நிர்வாக சீர்கேட்டால் இன்று மிகப்பெரிய நெருக்கடியில் மூழ்கியுள்ளது என்றும், இலங்கை அரசு பின்பற்றிய பொருளாதாரக் கொள்கையின் சாயல் இந்தியாவிலும் தெரிகிறது என தெரிவித்தார்.
இந்நிலை தொடர்ந்தால் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கும் ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் அவர் எச்சரித்தார்.
ஒரு நாடு ஒரு மொழி என்பது பாஜக கடைசியாக எடுத்துள்ள அஸ்திரம் என்ற ப. சிதம்பரம், பாஜகவின் பேராபத்தை 7 ஆண்டுகளாக கூறி வருவதாகவும் பாஜக நோக்கம் ஒரு நாடு, ஒரு கட்சி, ஒரு தலைவர் என்பதே.
இதனை எதிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், ரஷ்யா, சீனா, துருக்கி, பர்மா ஆகிய நாடுகள் போகின்ற பாதையில் இந்திய அரசியல் போகின்றது. எனவே மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ப. சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.