மாநிலங்களவை தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் அறிவிப்பு..!
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ப.சிதம்பரம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவி விரைவில் காலியாகிறது. மாநிலங்களவை தேர்தல் வரும் ஜுன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபை உள்ள உறுப்பினர்களை வைத்துப் பார்க்கும்போது, காலியாகும் 6 இடங்களில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் செல்லும்.
இதில் திமுக 3 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து ராஜ்ய சபா தேர்தலுக்குக் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ப. சிதம்பரம் நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.