ஓசோன் மாசு பாட்டில் சென்னை மணலி முதலிடம்

Chennai
By Yashini Jun 06, 2026 09:12 AM GMT
Report

ஓசோன் படலம் என்பது பூமியின் வளிமண்டலத்தின் அடுக்கு மண்டலத்தில் சுமார் 15 முதல் 30 கி.மீ உயரத்தில் அமைந்துள்ள ஒரு வாயுப் படலமாகும்.

இது சூரியனில் இருந்து வரும் ஆபத்தான புறஊதா கதிர்களை தடுத்து, பூமியில் உள்ள மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாக்கின்றன.

மனிதர்களின் செயல்பாடுகளால் உருவாகும் குளோரோபுளோரோ கார்பன்கள் மற்றும் பிற ரசாயனங்கள் வளிமண்டலத்தில் சேர்ந்து ஓசோன் அடுக்கை மெலிதாக்குகின்றான்.

ஓசோன் மாசு பாட்டில் சென்னை மணலி முதலிடம் | Ozone Pollution Chennai Manali Tops List

இந்த கதிர்கள் மனிதர்களைத் தாக்கினால் தோல் புற்றுநோய், கண் புரை மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

அந்தவகையில், வட சென்னையின் மணலி பகுதி நாட்டின் மிக மோசமான ஓசோன் மாசுபாடு மையங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மே 19ஆம் தேதி சென்னை மணலி பகுதியில் ஒரு கன மீட்டர் காற்றில் 500 மைக்ரோகிராம் ஓசோன் மூலக்கூறுகள் பதிவாகியுள்ளது.

இது இந்த ஆண்டில் நாட்டிலேயே பதிவான அதிகபட்ச ஓசோன் மாசுபாட்டு அளவாகும்.

ஓசோன் மாசு பாட்டில் சென்னை மணலி முதலிடம் | Ozone Pollution Chennai Manali Tops List

அதேபோல், மே 3ஆம் தேதி மணலியில் 361 மைக்ரோகிராம் ஓசோன் மூலக்கூறுகள் பதிவாகியிருந்தது.

மணலியில் பெட்ரோலிய ரசாயன தொழிற்சாலைகள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உரத் தொழிற்சாலைகள் மற்றும் அனல்மின் நிலையங்கள் அதிகமாக இயங்கி வருகின்றன.

ஆனால், இந்த மாசுபாட்டிற்கு தொழிற்சாலைகள் மட்டுமே காரணம் அல்ல என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

வாகனப் புகை மற்றும் ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் ஓசோன் உருவாக முக்கிய காரணமாக உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.