‘ஓசோன் படலம்’ மீண்டு வருகிறது... - நிபுணர்கள் மகிழ்ச்சி தகவல்....!
ஓசோன் படலம் மீண்டு வருவதாக நிபுணர்கள் நம்பிக்கைத் தகவல் கொடுத்துள்ளனர்.
ஓசோன் படலம்
‘ஓசோன்’ என்பது ஒரு ‘பாதுகாப்பு பெட்டகம்’ ஆகும். அதாவது, ஓசோன் படலம் பூமியின் வளிமண்டலத்தை சுற்றி இருக்கும் மிக மெல்லிய படலமாகும். இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
நிபுணர்கள் மகிழ்ச்சி தகவல்
இந்நிலையில், உலகைத் தாக்கும் காலநிலை தொடர்பான பேரழிவுகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் குறித்து வளர்ந்து வரும் கவலைகளுக்கு மத்தியில், கிரகத்தின் உச்சியிலிருந்து தற்போது நம்பிக்கை கதிர் வருகிறது. அதாவது, ஓசோன் படலம் மீண்டு வருவதற்கான பாதையில் உள்ளது என்றும், இன்னும் 4 தசாப்தங்களில் அது முழுமையாக குணமடைய உள்ளதாகவும் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.