ஹோட்டல்களில் ரூம் புக் பண்றீங்களா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
ஹோட்டல்களில் ரூம் புக் செய்கையில் இதை தெரிந்துகொள்ளுங்கள்.
ஹோட்டல் ரூம்
இந்தியாவில் இளைஞர்களால் அதிகளவில் OYO அறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான ஹோட்டல்களுடன் ஒப்பிடும்போது OYO அறைகள் குறைந்த வாடகை விகிதத்தில் வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனம் தப்போது 80 நாடுகளில் 800 க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படுகிறது. இதனை ரித்தேஷ் அகர்வால் 2012 இல் நிறுவினார். இதுபோன்ற ஓட்டல்கள் என்றால், கேமரா இருக்குமோ என்ற பயம் இருக்கும்.
தெரிந்துக்கொள்ள வேண்டியவை..
அந்த அறையில் இருக்கும் மொத்த லைட்களையும் ஆஃப் செய்துவிட்டு, உங்கள் மொபைல் போன் கேமரா வைத்து அனைத்து இடங்களையும் பாருங்கள். எங்காவது சிவப்பு நிறத்தில் ஒளி வந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக மின் சாதனங்களிலும், பாத்ரூம்களிலும் செக் செய்வது அவசியம். அங்கிருக்கும் கண்ணாடிகளில் கையை வைத்து பாருங்கள். அந்த கண்ணாடியில் உங்களின் இரு விரல்களும் தொட்டால் அந்த கண்ணாடி வழியாக மறுபக்கம் இருப்பவர்களும் உங்களை பார்க்கலாம்.
அதுவே உங்களின் இரு விரல்களுக்கும் இடையில் சற்று தூரம் இருந்தால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் பதிவு செய்த ஹோட்டல்களில் போலீசார் எந்த வித வாரண்ட்களும் இல்லாமல் வந்து சோதனை செய்ய முடியாது.
அது மனித உரிமை மீறல்கள். மேலும் உங்களுக்கு 18 வயதுக்கு மேல் ஆகி இருந்தால், கைது செய்யமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.