தமிழகம் வந்தடைந்த 12வது ஆக்சிஜன் ரயில்..!
ஆக்சிஜன் கன்டெய்னர்களை ஏற்றிய பன்னிரெண்டாவது ரயில், ஒடிசாவில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தது.
கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன், பிற மாநிலங்களில் இருந்து மே மாதம் 14ம் தேதி முதல், ரயில்களின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. 
ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து, சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களுக்கு, இதுவரை 11 ரயில்களின் மூலம் ஆக்சிஜன் வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் பன்னிரெண்டாவது ஆக்சிஜன் ரயில், ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் இருந்து, 64.95 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் இன்று மாலை 5.10 மணியளவில், தமிழகம் வந்தடைந்தது.
இதுவரை தமிழகத்திற்கு 649.4 மெட்ரின் டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan