சென்னை வந்தடைந்தது 36வது ஆக்சிஜன் ரயில்..!
chennai
oxygen train
arrives
By Anupriyamkumaresan
சத்தீஷ்கர் மாநிலத்திலிருந்து 74.47 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன் 36வது ரயில் சென்னை துறைமுகம் வந்தடைந்தது. தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில் கூடுதலாக ஆக்சிஜன் தேவைப்படுவதாக தொடர்ந்து மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது. இதனால் வடமாநிலங்களிலிருந்து அவ்வப்போது ஆக்சிஜன் ரயில்கள் சென்னை வந்தடைகிறது. அந்த வகையில், சத்தீஷ்கர் மாநிலம் பீலாய் நகரிலிருந்து 4 கண்டெய்னர் லாரிகள் மூலம், 74.47 மெட்ரிக் டன் ஆக்சிஜனுடன், 36வது ஆக்சிஜன் ரயில் இன்று காலை 6.25 மணிக்கு சென்னை வந்தடைந்தது.
