சென்னை வந்தடைந்தது 17வது ஆக்சிஜன் ரயில்..!
சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒடிசாவிலிருந்து 17வது ஆக்சிஜன் ரயில் சென்னை வந்தடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், வடமாநிலங்களிலிருந்து ரயில்கள் மூலம் ஆக்சிஜன் கொண்டு வரப்படுகின்றன. இதுவரை மேற்கு வங்கம் தாராபூர், ஜார்கண்ட், ஜம்ஷெட்பூர், மகாராஷ்டிரா, ஒடிசா பகுதிகளில் இருந்து கண்டெய்னர் பெட்டிகளில் ஆக்ஸிஜன் ஏற்றி வந்துள்ள நிலையில் இன்று ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியிலிருந்து கன்டெய்னரில் ஆக்சிஜன் முழுவதும் நிரப்பப்பட்டு 90 டன் அடங்கிய 17வது ஆக்சிஜன் சிறப்பு ரயில் சென்னை திருவொற்றியூர் கான் கார் நிறுவனத்திற்கு வந்தடைந்தது. இதுவரை 1019 டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் சென்னை வந்து அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது,