ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதா? - கொரோனா நோயாளியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் வங்கி ஊழியர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு கொரோனா சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் வங்கி ஊழியர் ராஜேஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆக்சிஜன் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டதால், ஒட்டுமொத்த ஆக்ஸிஜன் நிறுத்தப்பட்டதாகவும், நல்ல நிலையில் இருந்த ராஜேஷ் இதன் காரணமாகதான் உயிரிழந்ததாகவும் அவரது மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.