மதுரைஅரசுமருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு .. கொரோனாநோயாளிகள் உயிரிழப்பு
மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டினால்3கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
மதுரை அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் 1400நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஆக்சிஜனுடன் கூடிய 400படுக்கைகளிலும் நிரம்பிய நிலையில் 120பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் செயல்பட்டுவந்த ஆக்சிஜன் நிரப்பிகள் முழுவதுமாக தீர்ந்து போனது.
இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு போராடக்கூடிய சூழல் ஏற்பட்டது.
இதில் 3பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து முறையாக கண்காணிப்பு இல்லாத சூழலும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் தான் நோயாளின் இறப்பிற்கு காரணம் என உறவினர்கள் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.