அரசு மருத்துவமனையில் நடமாடும் ஆக்சிஜன் சேவை தொடக்கம்

TN Government Oxygen on wheels service Dhayanidhi maran MP Minister sekar babu
By Petchi Avudaiappan May 19, 2021 09:04 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னை அயனாவரத்தில் வாகனங்கள் மூலமாக ஆக்சிஜன் விநியோகிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் குறைவு நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் 33 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க பல்வேறு தனியார் நிறுவனங்களும் அமைப்புகளும் தமிழக அரசுக்கு உதவி செய்து வருகின்றன. 

இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆன் வீல்ஸ் திட்டத்தின் கீழ் நடமாடும் ஆக்சிஜன் சேவையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுடன் இணைந்து மத்திய சென்னை எம்பி தயாநிதிமாறன் இன்று தொடங்கி வைத்தார்.