ஆக்சிஜன் பற்றாக்குறை: இந்தியாவுக்கு உதவிகரம் நீட்டும் சீனா
corona
china
help
oxygen
By Praveen
கொரோனா பரவலைத் தடுக்க இந்தியாவுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என சீனா அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று இப்போது இந்தியாவில் உக்கிரத்தாண்டவம் ஆடிவருகிறது. இந்நிலையில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
மேலும் கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளும் மற்ற பிரிவு நோயாளிகளும் ஆக்சிஜன் தட்டுப்பாடால் அவதிப்பட்டு வருகின்றனர். பலர் இதனால் உயிரிழக்கவும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த சமயத்தில் இந்தியாவுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு சுமையைக் குறைக்க உதவ சீன அரசு தயாராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.