ஆக்சிஜன் தட்டுப்பாடு இரண்டு நாட்களில் தீர்க்கப்படும் - அமைச்சர் துரை முருகன்
தமிழக நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக வேலூருக்கு வருகை தந்த அமைச்சர் துரைமுருகனுக்கு வேலூர் அண்ணா சாலையில் உள்ள சுற்றுழா மாளிகையில் அதிகாரிகள் வருகை தந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "வேலூர் மாவட்டத்தின் கொரோனா நிலவரம் குறித்து DRO விடம் பேசி வருகிறேன்.நேற்று கூட ஆக்சிஜன் தேவை என கேட்டார்கள் அதை அனுப்பிவைத்தோம். அது இரவுக்குள் காலியாகிவிட்டதாக கூறி மீண்டும் கேட்டார்கள் 2 வது முறையாகவும் ஆக்சிஜன் அனுப்பியுள்ளோம்.
இது போதிய அளவுக்கு உள்ளதா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. காரணம் வேலூரை பொறுத்தரை 100 நோயாளிக்கு ஆக்சிஜன் அனுப்பினால் அது வருவதற்க்குள் 150 நோயாளிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆகவே ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது நிரந்தரமாக உள்ளது இந்த பிரச்சனை 2 நாட்களில் தீர்க்கப்படும் என்றும் மத்திய அரசிடமும் ஆக்சிஜன் கேட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.