தமிழகத்தில் நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாடு பெருமளவில் தீர்க்கப்பட்டிருக்கிறது - முதல்வர் ஸ்டாலின்

Tamil Nadu Stalin Oxygen
By mohanelango May 26, 2021 06:52 AM GMT
Report

தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிலவிவந்த கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்கள் மற்றும் ஆக்சிஜன் தேக்கி வைப்பதற்கான சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருப்பெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்., “திருப்பெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் நிறுவனத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்தி - நிரப்பப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டேன்.

தமிழகத்தில் நிலவிய ஆக்சிஜன் தட்டுப்பாடு பெருமளவில் தீர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்திலும் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.