டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள்..! முதல்வரிடம் ஒப்படைப்பு..!
mkstalin
tata consultancy
By Anupriyamkumaresan
சென்னை தலைமை செயலகத்தில் டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பாக 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் முதல்வரிடம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றால், ஏராளமானோர் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், டாடா கன்சல்டென்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1000 ஆக்சிஜன் செறிவூட்டிகள் முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான கடிதத்தை இன்று சென்னை தலைமை செயலகத்தில் டாடா கன்சல்டென்சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.குமரன், துணை தலைவர் சுரேஷ் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தனர்.