ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு..!
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் அமைந்துள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஏராளமானோர் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடோடு அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் இயங்கும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையான ஐநாக்ஸ் ஆக்சிஜன் தொழிற்சாலையில் தினசரி ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் தொழிற்சாலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தயாரிக்கப்படும் ஆக்சிஜன் அளவு குறித்தும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், தொழிற்சாலைக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டார்.