தமிழகத்திற்கு வந்து இறங்கிய ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள்

Oxygen ventilator
By mohanelango Jun 03, 2021 06:07 AM GMT
Report

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வெண்டிலேட்டா்கள் 25 டிராலியுடன் கூடிய வெண்டிலேட்டா்கள் சென்னை விமானநிலையம் வந்தது. மேலும் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஜொ்மனியிலிருந்து 4 சரக்கு விமானத்தில் வந்தன.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவியது. தமிழ்நாடு அரசு எடுத்த போா்க்கால நடவடிக்கையால், தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஆனாலும் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகளை முற்றிலுமாக தடுத்துநிறுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டா் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தமிழக அரசு வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் பெருமளவு வரவழைத்து வருகிறது.

அந்த நிலையில் நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து இந்திய விமானப்படை தனி விமானம் சென்னை பழைய விமானநிலையம் வந்தது. அதில் 56 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 60 வெண்டிலேட்டா்கள், டிராலியுடன் இணைக்கப்பட்ட வெண்டிலேட்டா்கள் 25 மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்தன.

இந்திய விமானப்படையினா் கண்காணிப்பில் விமானநிலைய லோடா்கள் அந்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து இறக்கி, விமானநிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

அதன் பின்பு விமானநிலைய அதிகாரிகள் தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அவா்கள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அதைப் போல் ஜொ்மனியிலிருந்து நேற்று இரவு சென்னை வந்த சரக்கு விமானத்தில் 4 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்தன. சுங்கத்துறையினா் மருத்துவ உபகரணங்களுக்கான முன்னுரிமை அளித்து உடனடியாக டெலிவரி கொடுத்து அனுப்பினா்.


GalleryGalleryGalleryGallery