படுக்கை வசதி இல்லை: ஆம்புலன்சில் காத்திருக்கும் நோயாளிகள்
வேலூரில் போதிய படுக்கை வசதி இல்லாததால் ஆம்புலென்சில் காத்திருக்கும் நோயாளிகள். படுக்கை கிடைக்காததால் திரும்பி சென்றனர். மருத்துவமனையில் அனைத்து O2 படுக்கைகளும் நிரம்பியுள்ளதால் நோயாளிகள் காக்க வைக்கப்படுகின்றனர். கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை தயார் செய்து வருகிறோம் என மருத்துவமனை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இன்று காலை சுமார் 5-க்கும் மேற்பட்ட ஆம்புலென்சுகள் நோயிளிகளுடன் சுமார் அரை மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை காத்திருந்தனர்.
இவர்கள் அனைவரும் இதய நோய், மூச்சுத்திணரல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக வந்திருந்தவர்கள் ஆவர். நீண்ட நேரம் காத்திருந்தும் படுக்கை கிடைக்காததால் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இது குறித்து நோயாளியின் உறவினர் ஒருவர் கூறுகையில் நாங்கள் மூச்சுத்தினறலால் கடந்த 1 மணி நேரத்திற்க்கு மேலாக காத்துக்கொண்டிருக்கிறோம் போதிய ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படுக்கை கிடைக்க தாமதம் ஆகும் என்றும் மற்ற நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்த பிறகே படுக்கை கிடைக்கும் என கூறுகின்றனர். எனவே தற்போது நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட போது, “மருத்துவமனையில் மொத்தம் 900 படுக்கைகள் உள்ளது அதில் 550 படுக்கைகள் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட படுக்கைகள் ஆகும். இது அனைத்திலும் தற்போது நோயாளிகள் உள்ளனர்.
இந்த முறை கொரோனா நோயாளிகள் மட்டும் இன்றி மற்ற நோயாளிகளும் அதிகம் மூச்சுத்திணறல் காரணமாக வருகிறார்கள். ஆகவே அனைவருக்குமே ஆக்சிஜன் இணைப்பு தேவைப்படுகிறது. இதனால் தான் நோயாளிகளை காக்க வைப்பதற்க்கான சூழல் உருவாகிவருகிறது.
இதணை தடுக்க தற்போது மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் இணைப்பு கொண்ட தற்காலிக படுக்கைகளை அமைத்து வருகிறோம். மேலும் மருத்துவம வளாகத்தில் உள்ள மற்ற கட்டிடங்களிலும் ஆக்சிஜன் படுக்கைகளை உருவாக்கி வருகிறோம்.
இவைகள் உருவாக்கப்பட்ட பின் இது போன்ற நோயாளிகள் காத்திருப்பு நிலை தடுக்கப்படும். மேலும் தற்காலிக படுக்கைகளில் ஆக்சிஜன் இணைப்பை செலுத்துவதற்க்கான உபகரணங்கள் போதிய அளவு கிடைப்பது இல்லை. தாமதம் ஏற்படுகிறது” என்றும் தெரிவித்தனர்.
கல்முனை பிரபல பாடசாலையில் மாணவர்களிடம் அங்கசேட்டை: பொது சுகாதார பரிசோதகரை கைது செய்ய வலைவீச்சு IBC Tamil
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
நைட்டி விவகாரத்தில் என்னை டி.ஆர்.பிக்காக பயன்படுத்திவிட்டார்கள் : பிரிய வர்ஷினி பரபரப்பு பேச்சு! Manithan