மதுரையில் 10 ஏக்கர் நிலபரப்பில் உருவாகும் ஆக்சிஜன் படுக்கை !
மதுரை தோப்பூரில் உள்ள காசநோய் அரசு மருத்துவமனையில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்படும் கொரோனா சிகிச்சை மையத்திற்கானப் பூர்வாங்க அடிப்படை பணிகள் இன்று துவங்கியது.
மதுரை தோப்பூர் காசநோய் அரசு மருத்துவமனையில் உள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஆக்க்சிஜன் படுக்கை அமைப்பதற்கான பணி இன்று துவங்கியது.
இந்தப் பணிகளைப் பார்வையிட்ட தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, பத்து நாட்களில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் தோப்பூர் காசநோய் அரசு மருத்துவமனை வளாகத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கூறினார்.
மேலும்
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரும் ஆயத்தப் பணிகளை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் துரித வேகத்தில் செய்து கொண்டு இருக்கிறோம்
என அமைச்சர் பி. மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறினார்.