ஆந்திராவுக்கு ஆக்சிஜன்.. உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

andhra highcourt oxygen inquires
By Irumporai Apr 22, 2021 06:24 AM GMT
Report

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது தொடர்பாக தாமாக முன் வந்து ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

கொரோனாவின் 2-வது அலை காரணமாக வட மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை நிலவிவருகிறது.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு ஆந்திரா, தெலுங்கானா அனுப்பியது சர்ச்சைக்குள்ளானது.

இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தநிலையில், தமிழகத்தில் தயாரான ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பியது குறித்து தாமாக முன்வந்து சென்னை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.