கொரோனா வந்து குணமடைந்தவர்களை வைத்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் செய்யும் நூதன ஆய்வு

Corona Research Britain Oxford
By mohanelango Apr 19, 2021 10:24 AM GMT
Report

உலக அளவில் கொரோனா வைரஸ் தற்போதும் தொடர்ந்து தீவிரமாக பரவி வருகிறது. பல வகையான தடுப்பூசிகளும் அங்கீகரிக்கப்படு மக்களுக்கு செல்த்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அதற்கேற்ப அறிவியல் உலகம் தொடர்ந்து தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து தற்போது நல்ல உடல்நிலையில் உள்ள மக்களுக்கு மீண்டும் கொரோனா வைரஸை செலுத்தி புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

18 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடத்தில் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. அவர்கள் 17 நாட்கள் கண்கானிப்பில் வைக்கப்படுவார்கள்.

கொரோனா பாதித்து குண்மடைந்தவர்களை மீண்டும் கொரோனா தாக்கினால் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் அதற்கு ஏற்றவாறு என்ன மாதிரியான சிகிச்சை உணவு பழக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியே இந்த ஆய்வு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.