ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தேர்தல் - இந்திய மாணவி போட்டி

London Tamil nadu
By Sumathi Mar 06, 2023 06:00 AM GMT
Report

லண்டன் ஆக்ஸ்போர்ட் புருக்ஸ் பல்கலைக்கழக தேர்தலில் இந்திய மாணவி போட்டியிடுகிறார்.

 பல்கலைக்கழக தேர்தல்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தேர்தல் - இந்திய மாணவி போட்டி | Oxford University Election Indian Student Contest

லண்டன் ஆக்ஸ்போர்ட் புருக்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதில் துணை தலைவர் பதவிக்கு இந்திய மாணவி பாஷின பாத்திமா போட்டியிடுகிறார். இவர் மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றவர்.

சென்னையை சேர்ந்த இவர் தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் IBM படித்து வருகிறார். கல்லூரி படிப்பை ஸ்டேல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்துள்ளார். இந்தியர்கள் மட்டுமல்லாது பிற நாடுகளில் இருந்து வந்து தங்கி படிக்கும் மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாணவியாக பாஷினி பாத்திமா பார்க்கப்படுகிறார்.

இதனால் மார்ச் 6ம் தேதி முதல் 9ந் தேதி வரை நடைபெறும் தேர்தலில் வெற்றி நிச்சயம் என ஆக்ஸ்போர்ட் மாணவ மாணவிகள் தெரிவிக்கின்றனர். வாழ்த்துக்கள் பாஷினி பாத்திமா