ஆசையாக வளர்த்த நாய்.. உரிமையாளரை கொன்று உடலை சாப்பிட்ட கொடூரம்- பகீர் பின்னணி!

Crime World Murder Romania
By Vidhya Senthil Jan 25, 2025 07:05 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in குற்றம்
Report

மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை வளர்ப்பு நாய் சாப்பிடச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  வளர்ப்பு நாய்

ருமேனியா நாட்டில் வசித்து வருபவர் அட்ரியானா. இவருக்கு வயது34. வீட்டில் தனியாக வசித்து வரும் இவர் 2 பக் வகை நாய்களை செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அட்ரியானாவை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு முயன்றுள்ளனர்.

owners mysterious death pet dogs ate the body

ஆனால், பதிலளிக்காததால் சந்தேகம் அவரது உறவினர்கள் அடைந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக அட்ரியானா தங்கியிருந்த வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீடு உட்புறமாகப் பூட்டப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து ருமேனியா காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

மனைவியைக் கொன்ற கணவர்..உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம் - பகீர் பின்னணி!

மனைவியைக் கொன்ற கணவர்..உடலைத் துண்டு துண்டுகளாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம் - பகீர் பின்னணி!

தகவலின் பேரில் விரைந்து வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அட்ரியானா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அட்ரியானாவின் பாதி உடலை அவரது 2 வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 சாப்பிட்ட கொடூரம்

இதனையடுத்து அவரை உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கபட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

owners mysterious death pet dogs ate the body

முதற்கட்ட விசாரணையில் வீட்டில் வன்முறை எதுவும் நடக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.மேலும் முழுமையான விசாரணைக்குப் பிறகு தான் உயிரிழந்ததற்காகக் காரணம் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.