ரயிலின் உரிமையாளராக இருந்த விவசாயி - ஆச்சரியம் ஆனால், உண்மை!
ரயிலின் உரிமையாளராக விவசாயி ஒருவர் இருந்துள்ளார்.
இந்திய ரயில்வே
பஞ்சாப், கட்டனா கிராமத்தில் வசிப்பவர் சம்பூரன் சிங். லூதியானா-சண்டிகர் ரயில் பாதையை அமைப்பதற்காக சம்பூரன் சிங் உட்பட பல விவசாயிகளின் நிலங்களை ரயில்வே வாங்கியது.
இதற்காக, ஒவ்வொரு ஏக்கருக்கும், 25 லட்சம் ரூபாய் வழங்க ரயில்வே முடிவு செய்யப்பட்டது. ஆனால், கட்டனாவுக்கு அருகிலுள்ள கிராமத்தின் நிலத்திற்கு, ஒவ்வொரு ஏக்கருக்கும், 71 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சம்பூரன் சிங் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
வரலாற்றில் முதல்முறை..
முதலில் இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும், பின்னர் ரூ.1.5 கோடிக்கும் அதிகமாக நீதிமன்றம் உயர்த்தியுள்ளது. மேலும், 2015 ஆம் ஆண்டிற்குள் விவசாயி சம்பூரன் சிங்கிடம் பணம் செலுத்துமாறு வடக்கு ரயில்வேக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனை ரயில்வேயால் செய்ய முடியவில்லை. எனவே, 2017ல் லூதியானாவில் உள்ள ரயில் நிலைய மாஸ்டர் அலுவலகத்தை வழக்குடன் இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, டெல்லிக்கும் அமிர்தசரஸுக்கும் இடையே ஓடும் கோல்டன் சதாப்தி எக்ஸ்பிரஸின் உரிமையாளரானார்.
தொடர்ந்து, ரயிலை ஜப்தி செய்ய வழக்கறிஞர்களுடன் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் மேல்முறையீடு செய்து உத்தரவை நிறுத்தியது.
இதன் மூலம், சம்பூரன் சிங் ரயிலின் உரிமையாளராக 5 நிமிடங்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.