என்ன மனுஷன்! சந்தோசமா இல்லையா -unhappy leave எடுத்துக்கோ!! வாரிக் கொடுக்கும் முதலாளி
பெரும்பாலும் அலுவலகத்தில் அவசர தேவைகளுக்கு மட்டுமே விடுமுறைகள் வழங்கப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் சிக்கல் தான். ஒரு வாரம் விடுப்பு எடுத்து சென்றாலும், எப்போ வறீங்க? என போன் செய்து கேட்கும் மேலாளர்களே இங்கு அதிகம்.
வேலைக்கு செல்பவர்கள் எப்போதும் லீவு கிடைக்கும் என ஏங்கி தவிப்பார்கள். வரம் ஒரு முறை கிடைக்கும் அந்த நாளில் தான் பலரும் தங்களை ஆசுவாசப்படுத்தி, மனதை லேசாக்கி, அடுத்த வாரத்திற்கு தயாராவார்கள்.
அப்படி இருக்கும் இந்த உலகில் தற்போது Unhappy Leave என்ற லீவை அறிமுகப்படுத்தி பணியாளர்களை குதூகலப்படுத்தியுள்ளார் நிறுவனர் ஒருவர். சீனா நாட்டில் ஹெனான் மாகாணத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் சூப்பர் மார்க்கெட் பாங் டோங் லையின் என்ற நிறுவனத்தின் தலைவரான யூ டோங்லாய் இந்த அறிவிப்பை வெளியிட்டு பணியாளர்களை திக்குமுக்காடவைத்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசுகையில், ஊழியர்கள் சுதந்திரமாக இருக்க தான் விரும்புவதாக குறிப்பிட்டு, அவர்கள் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
பணியாளர்கள் ஓய்வு நேரத்தை சுதந்திரமாக தீர்மானிக்க வேண்டும் என்பதால் போதுமான ஓய்வு வேண்டும் என்றும் தான் விரும்புவதாக குறிப்பிட்டு, மகிழ்ச்சியாக இல்லை என்று கூறி விடுமுறை கேட்டால் இனி எங்கள் நிர்வாகத்தால் மறுக்க முடியாது என அதிரடியாக தெரிவித்துள்ளார். இது மட்டுமின்றி அவர் பல திட்டங்களையும் வைத்துள்ளார். ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் மட்டுமே வேலை என்பதிலும் அவர் உறுதியாக உள்ளார்.