குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்கள் அரசியலுக்கு வர முடியவில்லை : பிரதமர் மோடி

Narendra Modi
By Irumporai May 26, 2022 10:18 AM GMT
Report

குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, 21ஆம் நூற்றாண்டில் இந்தியா 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' என்ற கனவோடு முன்னேறி வருகிறது.

நமது நாட்டில் புதிதாக உருவாகியுள்ள சிறு நிறுவனங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது. இன்று புதிய நிறுவனங்கள் அதிகரிப்பதில் உலகில் மூன்றாவது நாடாக இந்தியா திகழ்கிறது.

குடும்ப அரசியல் கட்சிகள் எவ்வாறு ஊழல் மயமாகி உள்ளன என்பதையும், அவை எவ்வாறு ஒரு குடும்பத்திற்காகவே மட்டுமே இயங்குகின்றன என்பதையும் நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது .

குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்கள் அரசியலுக்கு வர முடியவில்லை : பிரதமர் மோடி | Own Development Pm Modi Bjp Workers In Hyderabad

குடும்ப அரசியல் ' கட்சி ஒரு அரசியல் பிரச்சினை மட்டுமல்ல, நமது நாட்டின் ஜனநாயகம் மற்றும் இளைஞர்களின் மிகப்பெரிய எதிரி. ஒரே குடும்பத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகமாக ஊழல் எப்படி மாறுகிறது என்பதை நம் நாடு பார்த்துள்ளது.

குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை. குடும்ப அரசியல் கட்சிகள் தங்களின் வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.

ஏழை மக்களைப் பற்றிக் கவலைப்படாத இந்தக் கட்சிகள், ஒரு குடும்பம் எப்படி ஆட்சியில் இருக்க முடியுமோ அவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதில் தான் அவர்களின் அரசியல் நோக்கம் உள்ளது. மக்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு துளி கூட அக்கறை இல்லை இவ்வாறு அவர் கூறினார்.