கருமுட்டை விவகாரம் - வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 250 மருத்துவமனைகள்!

Tamil nadu Child Abuse Crime
By Sumathi Aug 06, 2022 12:36 PM GMT
Report

 கருமுட்டை விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மூடப்பட்டதை கண்டித்து ஈரோட்டில் உள்ள 250 தனியார் மருத்துவமனைகள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கருமுட்டை விற்பனை

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த குற்றத்தில், தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்து, ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இந்த விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கருமுட்டை விவகாரம் - வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 250 மருத்துவமனைகள்! | Ovum Sale Issue 250 Private Hospitals Strike

இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விதிமீறல் இருப்பதை உறுதி செய்தல் மட்டுமே மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்ய முடியும் எனவும்,

மேல் முறையீடு

பதிவை சஸ்பெண்ட் செய்வதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வில்லை எனக் கூறி, தமிழக அரசின் உத்தரவுகளை ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

கருமுட்டை விவகாரம் - வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 250 மருத்துவமனைகள்! | Ovum Sale Issue 250 Private Hospitals Strike

இந்த மேல்முறையீடு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரம் மிகுந்த சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தனி நீதிபதி தவிர்த்திருக்க கூடாது.

மேலும், மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், 250 மருத்துவமனைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.