இவர்தான் காதலரா? நேரலையில் ஓவியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபர்!

Oviya Viral Video Indian Actress
By Sumathi 2 வாரங்கள் முன்

நடிகை ஒவியா, நேரலையில் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென ஒருவர் அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்துள்ளார்.

ஒவியா

கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த களவாணி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்த போதிலும் தமிழில் முதன் முதலாக ஒளிப்பரப்பப்பட்ட பிக் பாஸ்-இன் முதலாவது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தார்.

இவர்தான் காதலரா? நேரலையில் ஓவியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நபர்! | Oviya Kiss Video Trending On Social Media

தொடர்ந்து 90 எம் எல், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தார். சில தருணங்களில் அரசியல் நிகழ்வுகள், அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் பொது வெளியில் கருத்து தெரிவித்து ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார்.

வைரல் வீடியோ

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா,தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் வீடியோவில் பிஸ்கெட் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தீடீரென ஒருவர் அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுடன் நெருக்கமாக இருக்கும் அவர் காதலரா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.