#gobackmodi ட்வீட்.. நடிகை ஓவியா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய பாஜக புகார்.!

police heroine politician
By Jon Feb 16, 2021 11:54 AM GMT
Report

பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது ட்விட்டரில் GO BACK MODI இந்திய அளவில் ட்ரெண்ட் ஆவது குறிப்பிடத்தக்கது. இந்த முறை நடிகை ஓவியாவும் GO BACK MODI என்று தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

நடிகை ஓவியாவை 5 லட்சத்து 51 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். அவரது 'கோ பேக் மோடி' பதிவை 17 ஆயிரம் பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். 58 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில், நடிகை ஓவியாவின் இந்த ட்வீட் குறித்து பாஜகவின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் என்பவர் சிபிஐசிஐடி அலுவலகத்தில் உள்ள சைபர் செல்லுக்கு புகார் அளித்துள்ளார்.

அவரின் அந்த புகாரில், "பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையை குறிப்பிட்டு, பிரதமரின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் விதத்தில், சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் விதமாக நடிகை ஓவியா 'GO BACK MODI' எனப் பதிவிட்டுள்ளார். எனவே நடிகை ஒவியாவின் பதிவு குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகை ஓவியா மீது தேசதுரோக வழக்கு, இரு சமூகங்கள் இடையே பதற்றத்தை ஏற்படுத்துதல், அவதூறு பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்." என்று கோரிக்கை வைத்துள்ளார்.