#GoBackModi: பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா

actress twitter politician
By Jon Feb 13, 2021 06:22 PM GMT
Report

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வரவிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை தமிழகம் வரும் பிரதமர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார், இதற்காக டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வரும் மோடியை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா, #GoBackModi என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்திருக்கிறார்.