தனது பிறந்தநாளை மாணவிகளுடன் கொண்டாடிய நடிகை ஓவியா - மேடையில் நடனமாடி மகிழ்ச்சி
கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளிவந்த களவாணி படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஓவியா.
இவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்த போதிலும் தமிழில் முதன் முதலாக ஒளிப்பரப்பப்பட்ட பிக் பாஸ்-இன் முதலாவது சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தார்.
வெகுளியாக மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் உண்மையை எந்த ஒளிவு மறைவுமின்றி முகத்திற்கு நேராக பேசும் ஓவியாவின் யதார்த்த குணம் பார்வையாளர்களின் மனங்களை கவர்ந்தது.
ஓவியாவிற்கு ஆர்மி தொடங்கும் அளவிற்கு வெளியில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் கடலளவு பெருக்கிப்போனது.
நிகழ்ச்சியின் நடுவிலேயே தனது சொந்த காரணங்களுக்காக வெளியேறிய ஓவியா தொடர்ந்து 90 எம் எல், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்தார்.
சில தருணங்களில் அரசியல் நிகழ்வுகள், அரசியல் கட்சி தலைவர்கள் குறித்தும் பொது வெளியில் கருத்து தெரிவித்து ரசிகர்களை ஆசரியப்பட வைத்துள்ளார் இவர்.
இந்நிலையில் தனது 31-வது பிறந்தநாளை நடிகை ஒவியா இன்று கொண்டாடினார்.
சேலத்தில் தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற ஓவியா, மேடையில் மாணவிகளுடன் நடனமாடினார். மேலும் அவரது பிறந்த நாளை கல்லூரி மாணவிகள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓவியா, பெண்கள் எப்படி நடக்க வேண்டும் என அறிவுரை வழங்குவதற்கு மாறாக, பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என ஆண்களுக்கு சிறுவயது முதலே சொல்லித்தர வேண்டும் என்றார்.