"அப்படி" நிறைய பேர் என்ன யூஸ் பண்ணிட்டாங்க...வேதனையுடன் பேசிய ஓவியா
நடிகை ஓவியா தன்னிடம் பலரும் பழகி ஏமாற்றிவிட்டதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஓவியா
களவாணி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ஓவியா, பின்னர் தொடர்ந்து கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்ட பெரும் வரவேற்பை பெற்றார்.
தனியாக ஓவியா ஆர்மி என்ற பெயரில் ரசிகர்கள் இணையத்தளத்தில் ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டு மிகவும் ட்ரெண்டிங் டாபிக்காக மாறிய ஓவியா, அந்த புகழை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் நடித்த "90 எம்.எல்" படம் கடுமையான விமர்சனங்களை பெற்று மிக பெரிய தோல்வி படமாக அமைத்தது.
என்ன நிறைய பேர் யூஸ் பண்ணிட்டாங்க
இருப்பினும் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து பிரபலமாகவே இருந்து வரும் ஓவியா, அவ்வப்போது பேட்டிகளும் அளித்து வருகின்றார். இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தது வைரலானது.
[
இந்நிலையில், தன்னுடைய ரிலேஷன்ஷிப் பற்றி சில கருத்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், தான் நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக குறிப்பிட்டு, ஆனால் அவையெல்லாம் தனக்கு செட் ஆகவில்லை என கூறினார்.
அந்த ரிலேஷன்ஷிப்பில் தான் உண்மையாகத்தான் இருந்த நிலையிலும், ஆனால் தன்னை நிறைய பேர் யூஸ் பண்ணியிருக்கிறார்கள் என்றும் பணம் விஷயத்தில் நிறையவே ஏமாற்றியிருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.