கல்யாணம் ஆகலான என்ன...எனக்கு குழந்தை இருக்கு...ஷாக் கொடுத்த ஓவியா

Oviya Tamil Cinema Tamil Actors
By Karthick Sep 01, 2023 04:00 PM GMT
Report

தனக்கு திருமணமாகவில்லை என்றாலும் தனக்கு குழந்தை இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஓவியா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஓவியா   

மலையாள நடிகையான ஓவியா கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

oviya-about-having-child

பின்னர் படவாய்ப்புகள் குறைந்த போது அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஒரு சில படங்களில் நடித்தபோதிலும் பெரிதாக மீண்டும் வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. 

குழந்தை இருக்கு..?

 இந்நிலையில், தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் லெஸ்பியனா? என்ற கேள்விக்கு நடிகை ஓவியா பதிலளித்துள்ளார். அந்த பேட்டியில், நீங்கள் ஒரு லெஸ்பியன் என்று கருத்து நிலவுகிறது உண்மையா?" என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "நான் லெஸ்பியன் கிடையாது. இது போன்ற கருத்துக்கள் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் என ஓவியா பதிலளித்தார்.

oviya-about-having-child

மேலும் தான் திருமண செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதால் தன்னை சிலர் அவ்வாறு நினைத்து கொண்டுள்ளதாக நடிகை ஓவியா தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இதற்கிடையில், விரைவில் துவங்கவுள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளராக ஓவியா கலந்து கொள்வார் என்ற தகவல்கள் வேகமாக பரவி வருகின்றது.   

oviya-about-having-child

அதே நேரத்தில் தனக்கு திருமணமாகவில்லை என்றாலும் தனக்கு குழந்தை இருப்பதாக குறிப்பிட்டு அது தன்னுடைய நாய் குட்டி தான் என கூறினார். அதனை தான் குழந்தை போல்தான் பார்த்துக்கொள்வேன் என கூறிய ஓவியா , அதற்கு தானே சோறு ஊட்டுவேன் என்றும் எப்போதும் அந்த நாய்க்குட்டி தன் அருகில்தான் படுக்கும்" என்று அந்த பேட்டியில் ஓவியா தெரிவித்துள்ளார்.