அது எப்படி ஒரே இரவில் தோனியை வழிகாட்டியாக அறிவித்தது எப்படி? - கேள்வி எழுப்பும் அஜய் ஜடேஜா
கடந்த 9-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் டி20 உலக கோப்பை தொடருக்கான அணியை அறிவித்தது. அதில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளரின் விவரங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் அணியின் வழிகாட்டியாக தோனி நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தோனி அணியின் வழிகாட்டியாக இருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான அஜய் ஜடேஜா. எனக்கு தோனியின் நியமனம் வியப்பாக இருந்தது.
நான் தோனியின் தீவிர ரசிகன். தனது ஓய்வுக்கு முன்னதாகவே அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுத்த கேப்டன். ஆனால், இந்தியாவை கிரிக்கெட் உலகின் நம்பர் 1 அணியாக மாற்றிய பயிற்சியாளர் இருக்கையில் அணியை வழிநடத்த வழிகாட்டி ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒரே நாள் இரவில் அப்படி என்ன தான் நடந்திருக்கும் என்பது புரியாத புதிராக உள்ளது என அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.