உடல்களை வைக்க இடமில்லை…நாடு முழுவதும் ரத்த வாசனை – காசாவில் தற்போதைய நிலை..!

Israel Palestine Israel-Hamas War
By Thahir Oct 16, 2023 09:46 PM GMT
Report

இஸ்ரேல் காசா மீது தொடர்ந்து போர் நடத்தி வரும் நிலையில் உயிரிழந்தோர் உடல்களை வைக்க இடமில்லாமல் ஐஸ்க்ரீம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

நிரம்பி வழியும் பிணவறைகள்

அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இஸ்ரேல் போர் புரிய போவதாக அறிவித்து காசா மீது வான் வழித்தாக்குதல் நடத்தியது.

Overflowing morgues in Gaza

இதில் ஏராளமான அப்பாவி மக்கள் இறந்துள்ளனர். இந்த போரில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைக்க இடமில்லாமல் காசா திணறி வருகிறது.

காசாவில் உள்ள பல்வேறு ஊர்களிலும் மருத்துவமனையின் பிணவறைகள் நிரம்பி வழிகிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் கல்லறைகளில் அடக்கம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிகரிக்கும் சடலங்களை வைக்க இடம் இல்லாததால் ஐஸ்கீரிம் டிரக்குகள் தற்காலிக பிணவறைகளாக மாற்றப்பட்டுள்ளன.

Overflowing morgues in Gaza

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு 

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் குடியிருப்புகள் மேல் குண்டு மழை பொழிந்து வருகிறது இஸ்ரேல். கடந்த வியாழன் ஒரு நாளில் மட்டும் சுமார் 6,000 முறைகள் இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது பறந்து குண்டுகளை வீசியதாக இஸ்ரால் ராணுவம் பெருமையுடன் தெரிவித்தது.

இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 2,600 என்பதை தாண்டியுள்ளது. காசா குடிமக்களின் அடிப்படைத் தேவைக்கான குடிநீர் வரத்தை இஸ்ரேல் துண்டித்ததோடு, மருத்துவம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் கிடைப்பதில் போர் காரணமாக தடங்கல் ஏற்பட்டுள்ளது.