துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 640ஆக உயர்வு...!
துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்
துருக்கியில் இன்று (திங்கள்கிழமை) 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு சிரியா, லெபனான் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டது.
ஆரம்ப நிலநடுக்கம் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டாகி நகருக்கு கிழக்கே 26 கிமீ தொலைவில் 17.9 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இரண்டாவது நிலநடுக்கம் சில நிமிடங்களுக்குப் பிறகு மத்திய துருக்கியில் 9.9 கிமீ ஆழத்தில் தாக்கியது.
இந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கினர்.

பலி எண்ணிக்கை 640ஆக உயர்வு
இதற்கு முன்பு இந்த நிலநடுக்கத்தில் 600 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 360 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.
தற்போது வெளியான தகவலின்படி, நிலநடுக்கத்தில் 2,323க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 640ஆக உயர்ந்துள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
#Turkey Till Over 500 dead after powerful 7.8-magnitude quake hits Turkey and Syria. Shocking. Many casualties are feared. pic.twitter.com/5auuV1DmW4
— Shilpa Thakur (@Shilpaa30thakur) February 6, 2023