அடைக்கலத்திற்கு வந்த தோழி - கருமுட்டையை விற்க சொல்லி அடித்த தம்பதி!

Chennai Pregnancy Crime
By Sumathi Jul 19, 2022 06:30 PM GMT
Report

பெண்ணிற்கு அடைக்கலம் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றி, அவரிடம் இருந்து கருமுட்டையை கொடுக்குமாறு கனவன் மனைவி வலியுறுத்தியுள்ளனர்.

பெண்ணிற்கு அடைக்கலம் 

சென்னை எர்ணாவூர் பகுதியில் வசித்து வரும் ஸ்ருதிக்கு(22) திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருக்கிறது. கணவர் விஜயுடன் சில நாட்களாக தகராறு ஏற்பட்டிருக்கிறது. தகராறு முற்றிய நிலையில், ஸ்ருதி தனது கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியில் வந்துவிட்டார்.

அடைக்கலத்திற்கு வந்த தோழி - கருமுட்டையை விற்க சொல்லி அடித்த தம்பதி! | Ovam Sales Crime Increasing Around Tamil Nadu

இந்நிலையில், தோழியான ஐஸ்வர்யா தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, தனது கணவர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணாவுடன் திருவொற்றியூர் வசித்துவருகிரார். தங்கள் வீட்டில் தங்கியிருந்த ஸ்ருதியை வேலைக்காரியைப் போல் நடத்தியுள்ளனர்.

கருமுட்டை தர அழுத்தம்

அதோடு, ஸ்ருதியின் கருமுட்டையை தருமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர். அதற்கு ஸ்ருதி மறுக்கவே, தங்கள் பேச்சை கேட்குமாறு சொல்லி, துன்புறுத்தி அடித்ததாக கூறப்படுகிறது.

அடைக்கலத்திற்கு வந்த தோழி - கருமுட்டையை விற்க சொல்லி அடித்த தம்பதி! | Ovam Sales Crime Increasing Around Tamil Nadu

இந்நிலையில் ஜெனிஷ் கண்ணா மற்றும் ஐஸ்வர்யா வெளியில் சென்ற நேரத்திற்காக காத்திருந்த ஸ்ருதி, சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், வீட்டில் இருந்து தப்பித்து ஓடி வந்து தனது கணவர் விஜய்க்கு தகவல் கொடுத்துள்ளார்.

விசாரணை 

அவர்கள் இருவரும் உடனடியாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு சென்று ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் ஜெனிஸ் கண்ணா மீது புகார் அளித்துள்ளார் ஸ்ருதியும் அவரது கணவர் விஜயும் அளித்த புகாரின் அடிப்படையில்,

திருவொற்றியூர் காவல் துறையினர் சூரஜ் என்ற ஜெனிஸ் கண்ணா மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.