மோகன் பகவத்திற்கு பதிலடி கொடுத்த ஓவைசி...!
பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை குறிவைத்தவர்கள் காட்டிய வெறுப்பு இந்துத்துவத்தின் விளைவுதான் என ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார்.
காசியாபாத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்கள் ஆபத்தில் உள்ளது போன்ற மாய பிம்பம் உள்ளது.அவர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் வேறு வேறு குழுக்கள் அல்ல. ஏற்கனவே இணைந்து தான் இருக்கிறார்கள். எனவே, அவர்களை இணைப்பதற்குப் புதிதாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓவைசி வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மாட்டிற்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாது. ஆனால் ஜுனைத், அக்லக், பெஹ்லு, ரக்பார் மற்றும் அலிமுதீன் போன்ற பெயர்களைக் கொண்டவர்களை கொலை செய்ய நன்கு தெரியும்.
பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்களை குறிவைத்தவர்கள் காட்டிய வெறுப்பு இந்துத்துவத்தின் விளைவுதான் என டிவீட் செய்துள்ளார்.