உடம்பு அப்படி இருந்தா.. அட்ஜஸ்ட்மென்ட்; அந்த டேரக்டர் ஆபீசுக்கே கூப்டு.. போட்டுடைத்த நடிகை!
சினிமாவில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து நடிகை ரேகா பேசியுள்ளார்.
நடிகை ரேகா
“கண்டேன் உன்னை தந்துவிட்டேன் என்னை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா. இவர் யூடியூப் பிராங்க் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் ஆவார். தற்போது இயக்குநர் பாலா இயக்கியுள்ள வணங்கான் படத்தில் ரேகா நடித்துள்ளார்.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரேகா, சினிமாவில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது "சினிமாவில் வாய்ப்பு தேடும் போது பெண்கள் என்ற நிலையில் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொல்கிறார்கள்.
பெரும்பாலான இயக்குநர்கள் கேரளா, பெங்களூருவில் நல்ல உடல்வாகு கொண்ட பெண்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். இதனால் தமிழ்நாடு பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
வாய்ப்பு கொடுத்தார்
சில பேர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி என்னிடம் அணுகியுள்ளார்கள். எனக்கு அந்த நேரத்தில் எல்லாம் நம்மை எதாவது செய்து விடுவார்களோ என பயமாக இருக்கும். நான் என்னுடைய அப்பா, நண்பர்களிடம் சொல்லி வருத்தப்படுவேன்.
எனக்குன்னு நிறைய திறமை இருக்கிறது. நான் பிராங் வீடியோ எல்லாம் பண்ணுவேன். அதைப் பார்த்து தான் இயக்குநர் பாலா அவரது ஆபீஸூக்கு என்னை நேரடியாக அழைத்து ஆடிஷன் கூட இல்லாமல் வாய்ப்பு கொடுத்தார். நான் பாலா படத்தில் நடிப்பதற்கு முன்னால் சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளேன்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நான் நடித்த “கண்டேன் உன்னை தந்தேன் என்னை” என்ற படம் வெளியானது. அந்த படம் 5 நாட்கள் மட்டுமே ஓடியது. சினிமா என்பதை தாண்டி சின்ன சின்ன நடிகர்களுக்கு யூட்யூப் சேனல் தான் கைக்கொடுக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.