சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் பறவை காய்ச்சல் பரவல்..!

Bird Flu United States of America China
By Thahir Apr 30, 2022 03:43 AM GMT
Report

சீனாவில் 4 வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அமெரிக்காவிலும் ஒருவருக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோவில் வசிக்கும் கோழி பண்ணையாளருக்கு பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் நான்கு வயது சிறுவனுக்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தகவல் வெளியிட்டது.

பறவை காய்ச்சலின் H3N8 திரிபு முதல் முறையாக மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளது என தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்தது.

சிறுவன் வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள்,காகங்கள் மூலம் பறவை காய்ச்சல் பரவி இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வகை வைரஸ் மனிதர்களை பாதிக்கும் திறனை கொண்டதில்லை எனவும் மக்களிடம் பரவும் ஆபத்து குறைவு என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோவில் வசிக்கும் கோழி பண்ணையாளர் ஒருவருக்கு புதிய வகை பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பாதிக்கும் H5N1 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொலராடோ மாகாண நிர்வாகம் கூறியுள்ளது.