புறநகர் ரயில்களுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

restrictions cancelled outpassenger train
By Anupriyamkumaresan Nov 15, 2021 06:16 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் நீக்கப்படுகின்றன.

அனைத்துப் பயணிகளும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி புறநகர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்ட்ரல் - சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி செல்லும் ரயில்கள் ஆகியவற்றில் பயணிகள் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்களுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம் - பயணிகள் மகிழ்ச்சி | Out Passenger Train Restrictions Cancelled

முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள், ரிடர்ன் பயணச்சீட்டுகள் மற்றும் சீசன் டிக்கெட்டுகள் முன்பு போல் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்திருத்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பயணிகள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.