80 வயது தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம் - லாட்டரியில் ரூ.200 கோடி சம்பாதித்து அசத்தல்!
80 வயது தம்பதியினர் லாட்டரி விளையாட்டுக்கு மூலம் ரூ.200 கோடி சம்பாதித்துள்ளனர்.
லாட்டரி
அமெரிக்காவை சேர்ந்த தம்பதி ஜெர்ரி (80) - மார்ஜ் செல்பீ (81) ஆகியோர் ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டார் நடத்தி வந்தனர்.
இவர்கள் கடந்த 2003-ம் ஆண்டு முதல் வின்ஃபால் (WinFall) என்ற லாட்டரி விளையாட்டில் ஈடுபட்டு இதுவரை சுமார் 26 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.200 கோடி) சம்பாதித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த தம்பதியினர் சம்பாதித்த இவ்வளவு பெரிய தொகை குறித்து அரசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களின் வருமானத்தை அரசு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மகிழ்ச்சி
அதில், இவர்களின் வருமானம் நேர்மையான விளையாட்டின் மூலம் கிடைத்துள்ளது என்றும், சட்ட விரோதம் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 20 ஆண்டுகளில் லாட்டரி மூலம் ரூ.200 கோடி சம்பாதித்தது குறித்து அந்த தம்பதியினர் கூறுகையில் "இந்த தொகையின் மூலம், வீட்டைப் புதுப்பித்தோம்.
எங்களின் 6 குழந்தைகள், 14 பேரக்குழந்தைகள் மற்றும் 10 கொள்ளுப் பேரக்குழந்தைகளின் பள்ளிப் படிப்பு, தொழில்துறைக்கும் பணம் பயன்படுத்தப்பட்டது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.