OTT தளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தயார்- அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
OTT தளங்களில் வெளியாகும் இணையத்தொடர்கள், திரைப்படங்கள் இவற்றுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தயார் எனவும், விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிழமை நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் பேசிய மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் கேள்வி நேரம் நடை பெற்றது.
இதில் பேசிய பாஜக எம்.பி. மகேஷ் பொட்டார் OTT தளங்களில் வெளியாகும் படைப்புகளின் உள்ளடக்கம் குறித்து கேள்வி எழுப்பினார் இதற்கு பதில் கூறிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஓடிடி தளங்களில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வருகின்றன.
ஆகவே, ஓடிடியில் வரும் படங்கள், இணையத் தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கும் பணிகள் முடிந்துவிட்டன எனவும் விரைவில் அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.