ஓடிடியில் 'நவரசா' - வெளியீட்டு தேதி அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
movie
ott
release date
announce
navarasa
By Anupriyamkumaresan
இயக்குனர் மணிரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது.

நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக இயக்குநர் மணிரத்னமும், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் இணைந்து தயாரிக்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியது.

கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது உணர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு. வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்று படக்குழு இன்று டீசரை வெளியிட்டுள்ளது.