யார் மனதையும் புண் படுத்துவது எங்கள் நோக்கமும் இல்லை - மன்னிப்பு கோரிய தாண்டவ் படக்குழுவினர்

movie flim cine
By Jon Jan 19, 2021 05:33 PM GMT
Report

தாண்டவ் படத்தில் இந்து மதத்தை ஏளனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக எதிர்ப்புகள் வலுத்த நிலையில், படக்குழு அதற்கு மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அமேசான் ப்ரைமில் வெளியானது தாண்டவ் இணையத் தொடர். இந்த தொடரில் சைஃப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த இணையத் தொடர் ,இந்து மதத்தை தவறாக சித்தரித்துள்ளதாக புகார்கள் எழுந்ததுஇதனால்,பாஜக எம்.எல்.ஏ வான மனோஜ் கோடக் 'தாண்டவ்' வெப் சீரிஸை தடைசெய்ய வேண்டும் என மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார்.

மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகமும் அமேசான் தளத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டது. இந்த நிலையில் குபடக்குழு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் தாண்டவ் வெப் சீரிஸ் ஒரு புனைவு. அதில் இடம்பெற்ற காட்சிகள், அனைத்தும் கற்பனை என கூறியுள்ள படக் குழு.

எந்த ஒரு தனிநபரையோ, ஜாதியையோ, மதத்தையோ, இனத்தையோ, சமூகத்தையோ, மத நம்பிக்கைகளையோ , அரசியல் தலைவர்களையோ இழிவுப்படுத்தும் எண்ணம் இல்லை. ஒருவேளை , படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் யாருடையாவது மனதை புண்படுத்தியிருந்தால் படக்குழு சார்பாக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம். என கூறியுள்ளது.