இனி OTP வர தாமதமாகும் - ஆன்லைன் மோசடிகளை தடுக்க TRAI புது திட்டம்

Airtel India Mobile Phones Reliance Jio
By Karthikraja Aug 28, 2024 04:30 PM GMT
Report

ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க புதிய திட்டங்களை TRAI செப்டம்பர் முதல் அமல்படுத்த உள்ளது.

பண மோசடி

நவீன டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் புது புது வகையில் ஆன்லைன் பண மோசடிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

online scam

மொபைல் போனுக்கு வரும் OTPயை பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது, லிங்க்- ஒன்றை அனுப்பி அதன் மூலம் தகவல்களை திருடி பணத்தை எடுப்பது என தினமும் மோசடிகள் அதிகரித்து கொண்டே உள்ளது. இது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இந்த வகை மோசடிகள் நின்றபாடில்லை.

OTP

இந்நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. இந்த விதிகள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக டிராய் அறிவித்துள்ளது. இதன்படி URL, OTT Links, APK கோப்புகள் உள்ள எந்த செய்திகளையும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனுப்ப கூடாது.

மேலும் வங்கிகள் மற்றும் இணையதளங்கள் OTP அனுப்புவதாக இருந்தால் எந்த எண்ணில் இருந்து ஓடிபி அனுப்பப்படும் என்பதை ஆக.,31க்குள் பதிவு செய்ய வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. எந்த ஒரு நிறுவனமும் ஓடிபி அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை அனுப்பும் முன் அதன் தலைப்பு மற்றும் தகவல்களை தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும். 

otp new rule by trai

இந்த தகவல்களை அணுகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த விதிமுறைகளுக்கு உட்படாத sms கள் தடை செய்யப்படும். இதனால், பயனர்களுக்கு OTP கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.இது வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்களிடமிருந்து செய்திகளைப் பெறுவதில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

அழைப்பவரின் பெயர்

மேலும், ஒரு நபர் தனது மொபைல் எண்ணை டெலிமார்க்கெட்டிங் அல்லது விளம்பரத்திற்காக பயன்படுத்தினால், அவரது எண் இரண்டு ஆண்டுகளுக்கு முடக்கப்படும் என அறிவித்துள்ளது. மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட விளம்பரம் தொடர்பான அழைப்புகள் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் ‘30 140’ என்கிற எண்களில் மட்டுமே தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில் டிராய் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது.

மேலும், மொபைல்போன் மூலம் அழைப்பவரின் பெயரை, KYC அடிப்படையில் மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து டிராய் செயல்பட்டு வருகிறது. அரசு ஆவணங்களில் உள்ள பெயரை, மற்றவர்கள் தெரிந்து கொள்வதன் மூலம் மோசடிகளை தடுக்க முடியும் என டிராய் நம்புகிறது. இது True Caller போன்ற செயலிகளை மக்கள் சார்ந்து இருப்பதை குறைக்க உதவும்.