ஜனவரியில் தவெகவில் முக்கிய மிகப்பெரிய மாற்றம் - செங்கோட்டையன் சூசகம்
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தவெகவுடன் கூட்டணி
அப்போது பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நேற்று முன்தினம் மலேசியாவில் ஆடியோ ரிலீசுக்காக சென்றிருந்தார். அந்தக் கூட்டத்தை பார்க்கின்ற பொழுது அண்டை நாடான மலேசியா வியக்கும் அளவிற்கு,

உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு அந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து அலை மோதி வருகின்ற கூட்டம் 1972 இல் புரட்சித் தலைவருக்கு பார்த்ததை போல, 1988 இல் ஜெயலலிதாவிற்கு பார்த்ததை போல ஒரு மாற்றம் உருவாகி இருக்கிறது.
இந்த மாற்றம் தமிழகத்தில் முதலமைச்சராக அமர்வதை மக்கள் சக்தியோடு இணைந்து நடைபெறும். எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். விஜய்யை முதல்வராக ஏற்றுக் கொள்வார்கள் மட்டும்தான் கூட்டணியில் இணைய முடியும்.
செங்கோட்டையன் தகவல்
திருமாவளவன் கருத்து வேறு, அவருடைய கருத்துக்களை கேட்கின்ற பொழுது திமுக வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த பொழுது என்ன செய்து கொண்டு இருந்தார் என்பதை அவரிடம் கேட்க வேண்டும் கூட்டணியில் மற்றவர்கள் இணைவது குறித்த கேள்விக்கு,
பொறுத்திருங்கள் ஜனவரி முதல் வாரத்திற்குள் அனைத்தும் தெரியும். 100 நாள் வேலை திட்டம் தொடர்பான கேள்விக்கு, எல்லோரும் வாழ வேண்டும். எல்லோருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு.
எங்களைப் பொறுத்தவரை தெளிவாக சொல்லியிருக்கிறோம் ஈரோடு பொதுக்கூட்டத்தில் இரண்டு கருத்துக்கள் பரிமாறப்பட்டது. கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதற்கு தொண்டர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். மக்கள் உணர்வை விஜய் பிரதிபலிக்கின்றார் என்று தெரிவித்துள்ளார்.