இந்தோனேஷிய மொழியில் தாயாராகும் முதல் தமிழ் படம்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் பார்த்திபன்.
இவர் இயக்கி, தயாரித்து, தனி ஆளாக நடித்து வெளிவந்த படம்‘ஒத்த செருப்பு’.
கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று பல விருதுகளை குவித்தது.
2 தேசிய விருதுகள், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு ஆகிய விருதுகளையும் வென்றது.
மேலும், அபிஷேக் பச்சன் நடிக்க ஒத்த செருப்பு படம் ஹிந்தியிலும் ரீமேக் ஆகிறது.
இந்நிலையில் இந்தோனேஷிய மொழியான பஹாசா மொழியில் இந்த படம் ரீமேக் ஆகவுள்ளது.
நண்பகல்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 17, 2022
வெண்பொங்கல்
வியாபாரம்
சூடுபுடிக்குதாம்! pic.twitter.com/uFPg4A4nPY
இதன்மூலம் பஹாசா மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் என்னும் பெருமையை ஒத்த செருப்பு பெற்றுள்ளது.
இது குறித்த அறிவிப்பை நடிகர் பார்த்திபன் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.