Oscars2023 : பிரம்மாண்டமாக தொடங்கும் ஆஸ்கர் திருவிழா

By Irumporai Mar 12, 2023 02:32 AM GMT
Report

சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 95-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கப்படவுள்ளது. இன்று இரவு 8-மணிக்கு தொடங்க உள்ளது.

ஆஸ்கர் விருது விழா

இந்திய நேரப்படி மார்ச் 14-ஆம் தேதி திங்கள் கிழமை காலை 5.30 மணி முதல் காலை 8.30 வரை ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெறும் இந்த விருதுவிழாவில் பல இந்திய சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். பலருக்கும் விருது வழங்கப்படவுள்ளது.

Oscars2023 : பிரம்மாண்டமாக தொடங்கும் ஆஸ்கர் திருவிழா | Oscars2023 The Big Festival The Oscars

இந்திய படங்கள்

மேலும் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் இந்திய அளவில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜனல் பாடல் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைப்போல, சிறந்த டாகுமென்டரி திரைப்படப் பிரிவில் ‘ஆர் தட் ப்ரீத்ஸ்’ படமும், அடுத்து சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் ‘செல்லோ ஷோ’ படமும், ‘த எலிபன்ட் விஸ்பரர்ஸ்’ படம் சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் தேர்வுக்கு செய்யப்பட்டுள்ளது.

Oscars2023 : பிரம்மாண்டமாக தொடங்கும் ஆஸ்கர் திருவிழா | Oscars2023 The Big Festival The Oscars

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கர் நிறுவனம் 95-வது ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன் பெயர் இடம்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.