ஆஸ்கர் யூடியூப் கமிட்டிக்கு பணம் கொடுத்தாரா சூர்யா? - நடந்தது என்ன? கொந்தளிப்பில் ரசிகர்கள்

Committee Oscar YouTube Jay Beam
By Nandhini Jan 26, 2022 04:19 AM GMT
Report

5,000 அமெரிக்க டாலர்கள் பணம் கொடுத்து தான் 'ஜெய் பீம்' படத்தின் காட்சியை ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெறச் செய்துள்ளதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல் வைரலாக பரவி வருகிறது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' அனைத்து தரப்பினர் மத்தியிலும் மிகுந்த பாராட்டைப் பெற்றது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் இருளர், பழங்குடியினருக்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் சூர்யா நடித்தார். இந்த வரவேற்புக்கு மத்தியில் இப்படத்திற்கு சர்ச்சைகளும் கிளம்பியது.

தற்போது 'ஜெய் பீம்' படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து வருகிறது. அண்மையில் ஆஸ்கர் கமிட்டியின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சி இடம்பெற்றிருந்தன. அந்த யூடியூப் பக்கத்தில் ஒரு தமிழ் படத்தின் காட்சி இடம்பெறுவது இதுவே முதன்முறை என்பதால் பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்து வந்தனர்.

மேலும், 94வது ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் படங்களின் பட்டியலிலும் 'ஜெய் பீம்' படம் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், 5,000 அமெரிக்க டாலர் கொடுத்து தான் ‘ஜெய் பீம்’ படத்தின் காட்சியை ஆஸ்கர் யூடியூப் சேனலில் இடம்பெறச் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா ரசிகர்கள் இந்த சர்ச்சைகளின் உண்மை தன்மை குறித்து பதிவிட்டு வருகிறார்கள். அதன்படி ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் ஒரு படத்தின் காட்சி இடம்பெற வேண்டும் என்றால் அதற்காக முதலில் வீடியோவை சமர்பிப்பதற்காக 5 ஆயிரம் டாலர் செலுத்த வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் வீடியோக்களின் தரத்தை மதிப்பாய்வு செய்த பிறகு தான் வீடியோவை பதிவேற்றம் செய்யப்படும். பணம் செலுத்துவதால் மட்டுமே வீடியோக்களை ஆஸ்கார் யூடியூப் பக்கத்த்தில் பதிவேற்றம் செய்ய முடியாது.

எனவே 'ஜெய் பீம்' படத்தின் காட்சி தகுதியின் அடிப்படையிலே ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செயப்பட்டுள்ளதாக சூர்யா ரசிகர்கள் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறார்கள்.